47-வது திரைப்படத்தில், செம ஜாலி & நெகட்டிவ் ரோலில் சூர்யா..

Web Ads

சூர்யா நடிப்பில் அவரது 45-வது படமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் ‘கருப்பு’ திரைப்படம் ஆன்மீகம்ரீதியான கமர்ஷியல் ஆகும். இதனைத்தொடர்ந்து,வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சூர்யா-46’ என அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பீல் குட் பேமிலி என்டர்டைனர் ஆகும்.

இந்நிலையில், மலையாள சினிமாவில் ‘ரோமஞ்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜீத்து மாதவன் இயக்கத்தில், 47-வது படமாக சூர்யா இணையவுள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யா போலீசாக நடிப்பதாக முன்பே சொல்லப்பட்டது. மேலும், சூர்யா முன்னதாக ‘சிங்கம்’ படத்தில் நடித்திருந்த சீரியஸ் போலீசாக இல்லாமல், செம ஜாலியான, நெகட்டிவ் ஷேட் கொண்ட மாறுபட்ட போலீசாக நடிப்பதாகவும் தகவல்கள் வந்தன. கேங்ஸ்டர் வில்லன்களை சூர்யா இப்படத்தில் மிக வித்தியாசமாக கையாளுவார். அதாவது ‘ஆவேஷம்’ படத்தில் பகத் பாசிலின் கதாபாத்திரம்போல, இப்படத்தில் சூர்யாவின் ரோல் இருக்கும் என கூறப்படுகிறது.

இச்சூழலில், இப்படத்தின் டேக் லைன் I AM A BAD COP என வைக்கப்பட இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த தகவல் எல்லாம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

suriya and jeethu madhavan movie tagline and its genre
suriya and jeethu madhavan movie tagline and its genre