PT Selvakumar Request to TN CM
PT Selvakumar Request to TN CM

PT Selvakumar Request to TN CM : கொரோனா வைரஸ் உலகத்தையே அசச்சுறுத்தி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் தொடர்ச்சியாக உதவி வருகிறார்கள்.

இன்று 75 வது நாளை நிகழ்வை முன்னிட்டு, குமரி மாவட்டம் அஞ்சுகிராமம், அழகப்பபுரம், பொட்டல்குளம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் 108 பெண்களுக்கு அரிசிமூட்டைகள் மற்றும் தரமான காய்கறிகள் வழங்கப்பட்டது.

பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார் பேசியதாவது : இந்த கொடுமையான சூழலில் நமக்காக தொண்டு செய்யும் தூய்மை பணியாளர்களின் பணி போற்றத்தக்கது. இந்த நேரத்தில் நாங்கள் சொல்ல கடமைப்படுவது நேற்று பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளத்தில் வைரலான சென்னையை சேர்ந்த முகிலன் அகிலா என்ற தம்பதிகள் உடல்நிலை சரியில்லாத தன்னுடைய மனைவியை மருத்துவமனை அழைத்து சென்ற போது காவலர்கள் தடுத்ததால் உடனடியாக வீட்டுக்கு சென்று முகிலன் தீக்குளித்தது மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது.

அஜித், விஜய் கூட நெருங்க முடியாத சாதனையை செய்த சூர்யா!

அதைபோல் மதுரையில் ஒரு கர்பிணிப்பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து சென்றதற்காக நீ எப்படி அழைத்து வரலாம் என்று அவரை துன்புறுத்த அவரும் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தாம்பரத்தில் ஒரு ஊனமுற்ற ஆட்டோ ஓட்டுனரையும் இதே சித்ரவதை செய்து சாவுஎன்று சொல்லி அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

தயவு செய்து இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். காவல் தொழில் என்பது ஒரு புனிதமான பணி. இந்த அசுரத்தனமான கொடுமைகள் தூக்கியெறியப்பட வேண்டும். சாமானியர்கள் காவல்துறையை கண்டாலே பயந்து நடுங்குகிறார்கள்.

மக்களின் நண்பன் என்று சொல்கிறீர்களே இதுவா நட்பு. லட்சக்கணக்கான சிறு தொழில் குறு தொழில் செய்பவர்களை காயப்படுத்தி அவர்களிடம் பறிக்கப்பட்ட வாகனங்களும் தொடுக்கப்பட்ட வழக்குகளும் திரும்பப்பெற வேண்டும்.

சாமானிய மனிதர்களை காயப்படுத்துவது கொடூரத்தின் உச்சக்கட்டம். அவர்கள் ஒன்றும் ரவுடிகளோ, கடத்தல்காரர்களோ, கற்பழிப்பு செய்பவர்களோ கிடையாது. இந்த நேரத்தில் மக்களுக்கு நீங்கள் தான் ஆறுதலாக இருக்க வேண்டும். தவறு செய்தால் அவர்கள் புத்திமதி சொல்லி அயல் நாடுகளில் காவலர்கள் நடந்துகொள்ளும் கண்ணியமிகு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.

சுய இன்பம் நல்லது.. விஜய் ரசிகரின் மோசமான கமெண்டுக்கு ஓவியா கொடுத்த ஷாக் பதில்!

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை கொடூரமாக அடக்குவதற்காக கொண்டு வந்த லத்தி கலாச்சார சட்டம் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று அரசுக்கு PT செல்வகுமார் வேண்டுகோள் விடுத்தார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக கலப்பை மக்கள் இயக்கத்துடன் இணை‌ந்து ரஜகை GJ செல்வதாஸ் உதவினார்.

பின்னர் பொட்டல்குளம் ஐயப்பன் மலையடியின் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சிவபன்னீர், கார்த்திக் ராஜா, காணிமடம் தனசேகர், கோவில் தர்மகர்த்தா, அழகப்பபுரம் கிராம அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைப்பிடித்து நன்றி தெரிவித்து இன்முகத்துடன் சென்றனர்.

1
2
3
4
5
6
7
8
9
10
11
12