YouTube video

Suriya Bday Common DP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் வரும் ஜூலை 23 ஆம் தேதி தன்னுடைய 45-ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இந்த நிலையில் நேற்று ( ஜூலை 11 )ல் சூர்யாவின் பிறந்தநாள் காமெடி புகைப்படம் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு திரையுலகங்களை சார்ந்த பிரபலங்கள் இந்த போஸ்டரை வெளியிட்டனர்.

ஒன்னில்ல.. ரெண்டு – அடுத்தடுத்து வெளியான விக்ரம் பட அப்டேட்கள்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் கார்த்தியும் தனது அண்ணனின் பிறந்த நாளுக்காக இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளன்று சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துள்ள சூரரைப்போற்று படத்தின் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.