Web Ad 2

பிரபாஸ் நடித்த ‘த ராஜா ‘சாப்’ படக்குழு எச்சரிக்கை

Web Ads

‘த ராஜா சாப்’ படக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை ஏன் என காண்போம்..

பிரபாஸ் தற்போது நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமாகும். மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைத்துள்ளார்.

இதன் டீஸர் வெளியீட்டு விழா ஜூன் 16-ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்குள் இப்படத்தில் இருந்து 20 நொடி காட்சிகளின் வீடியோ இணையத்தில் கசிந்தது. இதையடுத்து, படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், ‘த ராஜா சாப்’ படத்திலிருந்து கசிந்த காட்சிகள் எந்த சமூக ஊடகங்களிலாவது காணப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுப்போம். இந்த விஷயத்தில் அனைவரும் படக்குழுவுக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

‘பாகுபலி’ படத்தில் அனைவரையும் கவர்ந்த பிரபாஸ் ‘த ராஜா சாப்’ படத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். நகைச்சுவை கலந்த மற்றும் எதிர்பாராத திகிலூட்டும் திருப்பங்களுடன் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

prabhas the raja saab film crew warning