‘தக் லைஃப்’ படம் ஓடிடி.விற்பனை எவ்வளவு தெரியுமா?
‘தக் லைஃப்’ படம் ஓடிடி.யில் விற்பனை பற்றிப் பார்ப்போம்..
மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரிந்ததே. ஆனால், ஓடிடி.யில் பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, எந்த படம் வெளியாகும் போதும் அதன் ஓடிடி உரிமம் வாங்கப்பட்டு, பின்புதான் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
அஅவ்வாறு, தக் லைஃப் திரைப்படமும், இந்தியாவின் பெரிய ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில் விற்கப்பட, பேசப்பட்டது. ஆனால், பேசப்பட்ட தொகையை விட, சுமார் 20-25% குறைவாக இப்போது ‘தக் லைஃப்’ படத்தை பேச்சுவார்த்தை நடத்தி வாங்கியிருக்கிறது என கூறப்படுகிறது.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்குவதற்காக முதலில் பேசப்பட்ட தொகை, சுமார் ரூ.130 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால், படம் வெளியாகி நெகடிவ் விமர்சனங்கள் வந்ததால், படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூலை பெறவில்லை.
இதையடுத்து, இந்த விலையை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் குறைத்திருப்பதாக கூறப்படுகிறது. தக் லைஃப் படம், தியேட்டரில் வெளியானதற்கு 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், தற்போது அதை மாற்றி, 4 வாரங்களுக்குள் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஜூன் மாத இறுதிக்குள்ளாகவே நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படத்தை பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த ஆண்டு வெளியான ‘இந்தியன்-2’ படத்தை விட, தக் லைஃப் திரைப்படம் குறைவான வசூலை பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஓடிடி. விற்பனை பெருந்தொகையாக அமையும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.