‘கூலி’ படத்தின் முதல் பாதியை பார்த்து ரஜினி இம்ப்ரஸ்
‘கூலி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில், படத்தின் முதல் பாதியை பார்த்த ரஜினிக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது என சொல்லப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல் பாதியின் எடிட்டிங் வேலைகளை லோகேஷ் முடித்துவிட்டார. அப்போது ‘ஜெயிலர்- 2’ படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்துள்ளார்.
தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுக்கப்பட்டதால், ‘கூலி’ படத்தின் முதல் பாதியை ரஜினி பார்த்துள்ளார். படம் அவர் நினைத்ததை விடவே சிறப்பாக இருப்பதாக ரஜினி லோகேஷிடம் கூறியதாக தகவல் வருகின்றது.
ஆனால், இந்த தகவலை லோகேஷ் கனகராஜோ அல்லது படத்திற்கு தொடர்புடையவரோ சொல்லவில்லை. ஆனாலும், ரஜினி ‘கூலி’ படத்தின் முதல் பாதியை பார்த்து லோகேஷை பாராட்டியதாக வந்த தகவல் உண்மைதான் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
தற்போது இரண்டாம் பாதியின் எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாதி எடிட்டிங்கும் முடிந்துவிடும் என்பதால், ரஜினி விரைவில் முழு படத்தையும் பார்த்துவிடுவார் என தெரிகின்றது. மேலும், அனிருத்தின் பின்னணி இசையையும் சேர்த்து பார்த்தால், கண்டிப்பாக ரஜினியை ‘கூலி’ திரைப்படம் மேலும் இம்ப்ரஸ் செய்யும் எனவும் சொல்லப்படுகிறது.
தங்கக் கடத்தலை மையமாக கொண்டு உருவானதாக கூறப்படும் இப்படத்தில், அமீர்கான், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் இணைந்துள்ளனர். முன்னதாக ‘கூலி’ படம் குறித்து நாகார்ஜுனா தெரிவிக்கையில், ‘முழுக்க விசில் சத்தம் பறக்கும். ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்’ என்றார்.