இரண்டு ஆண்டுகளாக என் படம் எதுவும் வெளியாகவில்லை.. ஆனால்? சமந்தா ஓபன் டாக்.!

Web Ads

சமந்தாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது.

actress samantha latest speech viral
actress samantha latest speech viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பங்காராம் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார்.

இந்த நிலையில் சமீபமாக சமந்தா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது அதாவது இயக்குனர் ராஜ் நிடிமுரு என்பவரை காதலித்து வருவதாகவும் பேசப்பட்டது. மேலும் தனது காதலருடன் சமந்தா துபாய் சென்றுள்ளதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது சமந்தா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது நான் இப்போது வெற்றியை சுதந்திரத்தின் அடிப்படையில் பார்க்கிறேன் இரண்டு ஆண்டுகளாக என் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை வளர்ச்சி அடைவதும் முதிர்ச்சி அடைவதும்தான் சுதந்திரம் முக்கியமான ஒரு பெட்டிக்குள் அடைபடாமல் இருப்பதே சுதந்திரம் என்பது இப்போது எனக்கு புரிந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்திருக்கும் போது உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் ஏனென்றால் நான் செய்யும் பல வேலைகள் எனக்கு நிம்மதியை தருகிறது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress samantha latest speech viral
actress samantha latest speech viral