Web Ads

இயக்குனர் அட்லிக்கு கிடைத்த கௌரவ டாக்டர் பட்டம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இயக்குனர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர்.

director atlee latest speech viral

director atlee latest speech viral

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு சென்னையில் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பட்டமளிப்பு விழாவில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதுகுறித்து அட்லீ எமோஷனலாக பேசியுள்ளார்.

அதாவது பொதுவாக நான் செய்யும் படங்களை அங்கிருந்து எடுத்தேன் இங்கிருந்து எடுத்தேன் எனக் கூறுவார்கள் நான் உண்மையை சொல்கிறேன் ஏனென்றால் இப்போது பொய் சொன்னால் எனக்கு உடனடியாக இருமல் வந்து விடுகிறது நான் பார்த்த விஷயங்களை தான் படமாக எடுத்தேன் என்று கூறியுள்ளார்

மேலும் என் அப்பா அம்மா என்ன இயக்குனராகம் வரை பார்த்துக் கொண்டார்கள் என்றால் அதிலிருந்து இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு என் மனைவி தான் காரணம் நான் ஒரு நல்ல மனுஷனா மாறியதற்கு முக்கிய காரணம் என் மகன் இது தவிர என் அண்ணன் தம்பி பெயரை சொன்னால் தெரிந்து விடுவீங்க என்னோட அண்ணன் தளபதி விஜய் என கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director atlee latest speech viral

director atlee latest speech viral