அனிருத்-காவ்யா மாறன் இடையே காதலா?
அனிருத் பற்றிய காதல் தகவல் உண்மையா என காண்போம்..
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானஅனிருத்தும், சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறனின் ஒரே மகளும், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனும் காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
மேலும், அனிருத் காதலுக்கு பச்சைக் கொடி காட்டலாம் என்றும் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. அனிருத் – காவ்யா மாறன் இருவரும் காதலிப்பது நிஜம் போல தெரிகிறது. ஆனால், இது உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை. அமெரிக்காவில் உள்ள வேகாஸில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
சன் ரைஸர்ஸ் அணியிலேயே இருவரும் ஒன்றாக சேர்ந்துதான் அந்த போட்டியை பார்த்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இவை யாவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களே. ஆனாலும், இது குறித்து இன்னும் இரு தரப்பிலும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.