“உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம் தான் ‘பிரேக்ஃபாஸ்ட்’” – நடிகை ரோஸ்மின்!

Web Ads

மாடலிங் துறையில் கவனம் பெற்ற நடிகை ரோஸ்மின், இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான மற்றும் கதையை முன்னெடுக்கும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா உருவாக்கிய கதாநாயகிகள் ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பதை எடுத்துக்காட்டிய ரோஸ்மின், அதுபோன்ற தாக்கம் ஏற்படுத்தும் கதாபாத்திரமே இந்தப் படத்தில் தன்னுக்குக் கிடைத்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது: “ரீமா சென், தமன்னா போன்றோரின் வலுவான கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. அந்த வகையில், இந்தப் படத்திலும் உணர்வுப்பூர்வமான, அதேசமயம் கியூட்டான ரொமான்ஸ் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த வேடம் எனது பன்முக நடிப்பை வெளிப்படுத்தும். ரசிகர்கள் இதை நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார்.

நடிகர்கள்: ராணவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Web Ad 2

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு – கிரிஜா வரதராஜ்
இயக்கம் – காந்தி கிருஷ்ணா
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடல் வரிகள் – வைரமுத்து, விவேக்
தமிழ்நாடு விநியோகம் – குகன்

‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.