37 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் ராமராஜனின் கரகாட்டக்காரன்

Web Ads

மக்கள் நாயகன் ராமராஜன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்த ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் அன்றைய காலகட்டத்திலேயே மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படம், தற்போது நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

இதற்காகப் படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்வதுடன், சினிமாஸ்கோப் மற்றும் DTS ஒலித்தரத்திலும் மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Web Ad 2

ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ‘கரகாட்டக்காரன்’, இந்த நவீனத் தொழில்நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி புதிய தலைமுறை ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரீ-ரிலீஸ் மூலம் மீண்டும் வசூல் சாதனை படைக்குமா ‘கரகாட்டக்காரன்’? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.