Petta vs Viswasam

Petta Vs Viswasam :

தமிழகத்தை தொடர்ந்து மலேசியா, பிரான்ஸ் ஆகிய இடங்களிலும் பேட்டையை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆஃபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது விஸ்வாசம்.

தல அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர் விடுமுறை என்பதால் இரண்டு படங்களும் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகின்றன. தமிழகத்தின் படம் வெளியான 6 நாட்களில் விஸ்வாசம் படம் ரூ 92.30 கோடி வசூல் செய்துள்ளது.

பேட்ட Vs விஸ்வாசம் – எது மாஸ்? – மக்களின் ஒட்டு இவருக்கு தான்.!

ஆனால் பேட்ட படம் ரூ 69.68 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் பேட்ட ரூ 6.34 கோடியும் விஸ்வாசம் 5.51 கோடியும் வசூல் செய்துள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து மலேசியா, பிரான்சிலும் விஸ்வாசம் படத்தின் வசூல் பேட்ட படத்தின் வசூலை முந்தி விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தான் வெற்றி, அதிரடியான வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

அதுமட்டுமில்லாமல் மலேசியாவில் கோல்டன் ஸ்கிரீன்ஸ் சினிமாவில் முதலிடத்தில் இருந்த பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது விஸ்வாசம் திரைப்படம்.

இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.