Web Ads

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான ‘படைத்தலைவன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

padaithalaivan movie 1 day collection update
padaithalaivan movie 1 day collection update

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் நேற்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , யாமினி சந்தர்,போன்ற முக்கிய பிரபலங்களின் நடிப்பிலும் இந்தத் திரைப்படம் உருவாகி இருந்தது.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது முதல் நாளில் 80 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

padaithalaivan movie 1 day collection update
padaithalaivan movie 1 day collection update