பொன்னி சீரியல் நடிகர் சபரிக்கு ஏற்பட்ட விபத்து..மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு..!
பொன்னி சீரியல் சபரிக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது.

ponni serial sabarish admitted in hospital
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பொன்னி. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தவர் சபரி. இவருக்கு சில நாட்களுக்கு முன் விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் கை, கால்களில் கட்டுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் என் உடல்நிலை குறித்து எனக்கே நிறைய கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நான் நலமாக இருக்கிறேன் விரைவில் திரும்பி வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன் ஒரு சில நாட்களுக்கு முன் ஒரு விபத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் இப்போது எலும்பில் ஒரு பிளேட் மாற்றப்பட்டிருக்கிறது என்னைப் பற்றி நீங்கள் இதுவரைக்கும் கேட்ட கேள்விகளுக்கு என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. உங்களுடைய பிரார்த்தனை எனக்குத் தேவை என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து விரைவில் குணமடைந்து வீடு திரும்புவீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்

ponni serial sabarish admitted in hospital