New Medical Colleges List in Tamilnadu
New Medical Colleges List in Tamilnadu

மருத்துவத்துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் முயற்சியின் நீட்சியாக, 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை முதல்வர் எடப்பாடியார் அடிக்கல் நாட்டி துவக்கிவைத்துள்ளார்.

New Medical Colleges List in Tamilnadu : முதல்வர் எடப்பாடியாரின் ஆட்சியில், தற்போது மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18 ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20 ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் துவக்கிவைக்கப்பட்டது.

பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20 ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கழகம் ஒப்புதல் வழங்கியது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 150 மருத்துவ இடங்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடியார்.

என்னை கிண்டல் அடிப்பதை நிறுத்துங்க.. காலேஜ் படித்த போது விஜய் மூஞ்ச பாருங்க – புகைப்படத்தோடு மீரா மிதுன் சர்ச்சை பதிவு

தமிழக முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்த 11 மருத்துவக்கல்லூரிகள்:

345 கோடி செலவில் அமைய உள்ள ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியைக் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதியும், 380 கோடி செலவில் விருதுநகர் மருத்துவக் கல்லூரியை மார்ச் 3 ஆம் தேதி அடிக்கல் நாட்டித் திறந்துவைத்தார். தொடர்ச்சியாக மார்ச் 4, மார்ச் 6, மார்ச் 7 மற்றும் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திருப்பூர் மாவட்டங்களில் மருத்துக் கல்லூரிக்களுக்கான அடிக்கல்லை நாட்டி துவக்கிவைத்தார்.

இதில் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியானது 348 கோடி செலவில் அமைய உள்ளது. அதேபோல நாமக்கல் மருத்துவக் கல்லூரியானது 338.76 கோடி செலவிலும், நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியானது 366 கோடி செலவிலும், திருப்பூர் மருத்துவக் கல்லூரியானது 336 கோடி செலவிலும் அமைய உள்ளது. அதேபோல 327 கோடி செலவில் அமைய உள்ள திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்குக் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.

385 கோடி செலவில் அமைய உள்ள திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்குக் கடந்த மே 19 ஆம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். 381.76 கோடி செலவில் அமைய உள்ள கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியைக் கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதியும், 347 கோடி செலவில் அமைய உள்ள அரியலூர் மருத்துவக் கல்லூரியை ஜூலை 8 ஆம் தேதியும் அடிக்கல் நாட்டித் துவக்கிவைத்தார். கடைசியாக 447.32 கோடி செலவில் ஜூலை 10 ஆம் தேதியன்று நீலகிரி மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.

இதனால் 34 மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் உருவாகும். புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம், தமிழகத்திலிருந்து ஆண்டு தோறும் 1650 மருத்துவர்கள் வெளிவர வழிவகை செய்துள்ளார். கொரோனா காலத்திலும் அரசு எடுத்து வந்த தீவிரமான முயற்சியால் பெருந்தொற்று காலங்களையும் சமாளிக்கும் வகையில், தமிழகத்தில் தரமான மருத்துவத்துறையினரை உருவாக்க, தொலைநோக்கு பார்வையோடு முதல்வர் எடப்பாடியார் செயல் புரிந்துவருகிறார். கிராமப்புறங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைவதன் மூலம் உயர்தர சிகிட்சை பாமர மக்களுக்கும் எளிதாக கிடைக்க செய்துள்ளார் முதல்வர் எடப்பாடியார்.

முதல்வர் எடப்பாடியாரின் ஆட்சியில், தற்போது மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18 ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20 ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் துவக்கிவைக்கப்பட்டது.

பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20 ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கழகம் ஒப்புதல் வழங்கியது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 150 மருத்துவ இடங்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடியார்.

தமிழக முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்த 11 மருத்துவக்கல்லூரிகள்:

345 கோடி செலவில் அமைய உள்ள ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியைக் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதியும், 380 கோடி செலவில் விருதுநகர் மருத்துவக் கல்லூரியை மார்ச் 3 ஆம் தேதி அடிக்கல் நாட்டித் திறந்துவைத்தார். தொடர்ச்சியாக மார்ச் 4, மார்ச் 6, மார்ச் 7 மற்றும் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திருப்பூர் மாவட்டங்களில் மருத்துக் கல்லூரிக்களுக்கான அடிக்கல்லை நாட்டி துவக்கிவைத்தார்.

இதில் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியானது 348 கோடி செலவில் அமைய உள்ளது. அதேபோல நாமக்கல் மருத்துவக் கல்லூரியானது 338.76 கோடி செலவிலும், நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியானது 366 கோடி செலவிலும், திருப்பூர் மருத்துவக் கல்லூரியானது 336 கோடி செலவிலும் அமைய உள்ளது. அதேபோல 327 கோடி செலவில் அமைய உள்ள திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்குக் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.

இதுவரை தளபதி விஜய் வாங்கியுள்ள மொத்த விருதுகள் என்னென்ன தெரியுமா? – முழு விவரம் இதோ