தில்லுமுல்லு வேடத்தில், சாமியாராக மாறி நாட்டையே உருவாக்கிய நட்டி நட்ராஜ்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று வெளியான ‘கம்பி கடன் கதை’ பற்றிய தகவல் பார்ப்போம்..
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த நட்டி நட்ராஜ் அனைவரையும் ஈர்த்தார். தற்போது ஹீரோவாகவும் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் சீன ரசிகர்களையே கண் கலங்க வைத்தது.
அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது அசத்தலான நடிப்பால் நட்ராஜ் அதிரடி காட்டியிருந்தார். இந்நிலையில், இவர் ஹீரோவாக அடுத்து ‘கம்பி கட்ன கதை’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், சாமியாராக மாறி தனியாக ஒரு நாட்டையே உருவாக்கி நட்டி நட்ராஜ் ஆடும் தில்லு முல்லுதான் இந்த படத்தின் கதை என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
சதுரங்க வேட்டை படத்தில் எம்எல்எம், ரைஸ் புல்லிங், மண்ணுளி பாம்பு, சிட் ஃபண்ட் மோசடி என ஏகப்பட்ட ஃபிராடு வேலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய நிலையில், ‘கம்பி கட்ன கதை’ கூடிய சீக்கிரமே அப்படியொரு படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிமுக இயக்குனர் ராஜநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான மங்காத்தா மூவிஸ் வெளியிட்டுள்ளது.