சென்னை : நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் , சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , பேராசிரியை விவகாரத்தில் ‘ தொடர் ‘ ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரதிற்க்கு பாஜக அரசும், பொம்மை அதிமுக அரசும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் ஆகும்.

வைகோ கூறுகையில், கோபால் மீது தேசவிரோத வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை பத்திரிக்கையாளர்களை மிரட்டும் செயல். வக்கில் என்ற முறையில் அவரை சந்திக்க வந்துள்ளேன். அனுமதி வழங்கவில்லை எனில், போலீசார் மீது அவமதிப்பு வழக்கு தொடருவேன் என கூறினார்.

கோபால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.