drunken passenger tries to open emergency door in flight
drunken passenger tries to open emergency door in flight

நேற்று டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் போதையில் தள்ளாடி கொண்டிருந்தார். அவர் திடீரென விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றதாகவும் இதனை அடுத்து சக பயணிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் அவரை எச்சரித்ததாகவும் தெரிகிறது.

போதையில் அவர் செய்த இந்த செயலால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்து கேப்டனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் விமானம் பெங்களூரில் தரையிறங்கியதும் போதையில் அவசர கதவை திறக்க முயன்ற பயணி மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாக விமான பயணிகளுக்கு துரதிஷ்டமான பல சம்பவங்கள் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பெண் பயணி மீது ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அவசரக் கதவை திறந்ததாகவும் ஆனால் அவரது தற்செயலாக திறந்ததை அடுத்து அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.