அதே நாளில் சமந்தாவும் திருமணம் செய்ய வேண்டும்: வைரலாகும் ரசிகர்கள் வாய்ஸ்
இருமனம் ஒருமனமாகி, நறுமணம் ஆவதே திருமணம். அதாவது, விஷயத்திற்கு வருவோம்..
நடிகை சமந்தாவை காதலித்து, திருமணம் செய்து… பின்னர் பிரிந்த பிறகு, நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், இருவீட்டார் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
மேலும், நாக சைதன்யாவிடம் சமந்தா தனது காதலை சொன்ன நாளில்தான், சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது சமந்தாவின் ரசிகர்களை வெகுவாக கோபப்படுத்தியது.
அதுமட்டுமின்றி, சமந்தாவும் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அவரின் ரசிகர்களுடைய ஆசையாகவும் இருக்கிறது.
இதற்கிடையே இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்ததால்தான் அவர்களின் நிச்சயதார்த்தத்தை திடீரென நடத்தும்படியான சூழ்நிலை உருவாகிவிட்டதாகவும், இதன் மூலம் நாக சைதன்யாவுக்கு இழந்த மகிழ்ச்சியை மீட்டு கொடுத்துவிட்டோம் என்ற நிம்மதி பிறந்திருப்பதாகவும் நாகார்ஜுனா தெரிவித்திருந்தார்.
அவர்களது திருமணம் மிக விரைவில் நடக்கவிருக்கிறது. மேலும், ராஜஸ்தானில்தான் அவர்களது திருமணம் நடக்கும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், இவர்களின் திருமணம் நடக்கவிருக்கும் இடம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதாவது ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸில்தான் இவர்களின் திருமணம் நடக்கும் என்றும், இங்கு நடந்தால்தான் சினிமா மற்றும் பிற துறை பிரபலங்கள் வருவதற்கு ஏதுவாக இருக்கும் என்று நாகார்ஜுனா தரப்பு விரும்புகிறது. அதற்கு சோபிதாவும் ஒத்துக்கொண்டு விட்டார்’ என கூறப்படுகிறது.
அதே நாளில், சமந்தாவும் மனதுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என ‘ சமந்தா படையினர் வலியுறுத்தி வருகின்றனர்.