Web Ads

மயங்கி கிடந்த சூர்யா, பதறிப்போன குடும்பத்தினர், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 14-02-25
Moondru Mudichu Serial Today Promo Update 14-02-25

நேற்றைய எபிசோடில் நந்தினி விவேக்கிற்காக வேண்டிக் கொண்டிருக்க டாக்டர் இன்னும் உங்க பையன் சூர்யா வரலையா நாங்க எங்க சைடும் கேட்டுட்டோம் எதுவும் பிளட் கிடைக்கல உங்க பையனை சீக்கிரம் வர சொல்லுங்க என்று சொல்லுகிறார் அப்பதான் விவேக காப்பாத்த முடியும் என்று சொல்லிய பிறகு அருணாச்சலம் AC க்கு போன் போட்டு சூர்யாவை கண்டுபிடித்து தருமாறு கேட்கிறார் அவனுக்காக இங்க ஒரு உயிர் போராடிக்கிட்டு இருக்கு சீக்கிரமா கண்டுபிடித்து கொடுங்க என்று சொல்ல அவரும் அனைத்து போலீஸ்காரர்களுக்கும் இன்பார்ம் செய்கிறார். மறுபக்கம் சூர்யா காரில் அந்த இரண்டு நபர்களுடன் மற்றொரு இடத்திற்கு வந்து இறங்கி சரக்கு வாங்க போக அவர்கள் சரக்கு வாங்கிக் கொண்டு வந்து சூர்யாவிடம் கொடுக்க போக காசு கேட்கின்றனர் சூர்யா கையில் இல்லாததால் பர்ஸ் தேடிப் பார்க்கிறார். வீட்டில் வைத்து விட்டதால் அவர்களிடம் நான் கண்டிப்பா கொடுத்துடறேன் வீட்ல போய் உங்களுக்கு டபுளா பே பண்ற என்று சொல்லியும் அவர்கள் கேட்காததால் ஒரு கட்டத்திற்கு மேல் காரின் இன்சூரன்ஸ் லைசன்ஸ் கேட்கின்றனர். சூர்யா அதையும் கொடுத்துவிட்டு குடிக்க போகும் நேரத்தில் போலீஸ் வந்துவிட அவர்கள் இருவரும் பயத்தில் சூர்யாவிடம் இருந்து சரக்கை புடுங்க அது அவர் மீது கொட்டி விடுகிறது.

பிறகு போலீஸ் வந்து அவர்களை விசாரித்துக் கொண்டிருக்க அதில் ஒரு போலீசுக்கு சூர்யா போட்டோவுடன் ஆடியோ ஒன்று வருகிறது அதைக் கேட்டுவிட்டு அவர் இது சாதா சரக்கு உங்களுக்கு ஃபாரின் சரக்கு வாங்கி தரேன் என்று ஜிபில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறார்.

போலீஸ் உடன் வந்து சூர்யா ஹாஸ்பிடல் இறங்குகிறார். பிறகு விஜி அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எங்க போனீங்க என்று கேட்க சூர்யா பதறிப்போய் எப்படி இருக்கான் என் பிரண்டு டாக்டர் என்று கேட்கிறார் ஆனால் சூர்யாவை உள்ளே விட மறுக்கின்றனர். எப்படி ஆச்சு டாடி என்று கேட்க வெளியே போகும்போது லாரி அடிச்சு இப்படி ஆயிடுச்சு நிறைய பிளட் லாஸ் ஆயிடுச்சு. உன்னோட பிளட் கொடுத்து சரி பண்ணனும் நினைச்சா நீ போன் எடுக்கல என்று சொன்னேன் சரி இப்ப கொடுக்கிறேன் வாங்க என்று கூப்பிட சூர்யா மேல் சரக்கு வாசனை வருவதைப் பார்த்து நீங்க குடிச்சிட்டு வந்து இருக்கீங்க எப்படி பிளட் கொடுக்க முடியும் அவ்வளவு தானா என்று விஜி அழ நான் நிஜமாவே குடிக்கல நந்தினி என்று சொல்லுகிறார். உடனே டாக்டர் வர நான் குடிக்கல டாக்டர் என்று சொல்லுகிறார் வேணா எனக்கு செக் பண்ணுங்க என்று சொல்ல, உங்க மேல சரக்கு வாசன வருது என்று டாக்டர் சொல்லுகிறார் இல்ல டாக்டர் நீங்க செக் பண்ணுங்க முதல்ல என்று சொன்னவுடன் ஒரு நர்ஸ் அழைத்து சூர்யாவை செக் செய்கிறார்.

கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் வந்து சூர்யாவோட உடம்புல ஒரு சொட்டு ஆல்கஹால் கூட இல்ல அதனால விவேக இருக்கு பிளட் கொடுக்கிற சிஸ்டம் ரெடி பண்ணியாச்சு சூர்யா பிளட் கொடுத்துக்கிட்டு இருக்காரு என்று டாக்டர் சொல்லிய உடன் இதுக்கு மேல உயிர் ஆபத்து இல்ல காப்பாத்திடலாம் என்று சொல்ல விஜி அருணாச்சலம் காலில் விழுந்து நன்றி சொல்லுகிறார். இதுக்கு ஏன்மா இப்படி காலில் விழுந்து மன்னிப்பு கேக்குற எல்லாமே நீங்க செஞ்ச புண்ணியம் தான் என்று சொல்லுகிறார்.

பிறகு சூர்யா பிளட் கொடுக்க விவேக்கிற்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிகிறது. டாக்டர்கள் விவேக் நல்லா இருக்காரு கண்ணு முழிச்சதும் பார்க்கலாம் என்று சொல்ல விஜி நன்றி சொல்லுகிறார் எனக்கு இல்லமா இவருக்கு சொல்லு இவருதான் பிளட் கொடுத்தார் அவர் கொடுத்ததுனால தான் காப்பாற்ற முடிஞ்சது என்று சொல்ல விஜி சூர்யாவிற்கு நன்றி சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல ரெஸ்ட் எடுங்க என்று சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் அருணாச்சலம் உட்காந்து கொண்டு இருக்க நந்தினி வருகிறார் நேத்து நைட்டு ஹாஸ்பிடல் போனது சூர்யா பிளட் கொடுத்தது யாருக்கும் எதுவும் தெரியாது இல்ல அம்மா என்று சொல்ல தெரியாது ஐயா என்று சொல்லுகிறார் தெரியறதுக்கு வாய்ப்பு இல்ல நம்ம ரெண்டு பேர் சொன்னா தான் தெரியும் என்று சொல்லுகிறார். யார்கிட்டயும் சொல்ல வேண்டாமா சொன்னா மட்டும் இவங்க என்ன பண்ண போறாங்க சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கின்றனர். பிறகு சூர்யா மேலிருந்து கீழே வர அருணாச்சலம் அவருக்கு கை கொடுக்கிறார் நல்ல வேலை நீ பிளட் கொடுத்த ஒன்று சொல்ல அதெல்லாம் விடுங்கடா டேடி எனக்கு ஒரு மாதிரி படபடப்பா இருக்கு என்று மறுபடியும் ஆரம்பிக்கிறார் இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிற்கு பால் எடுத்துக் கொண்டு போக சுந்தரவல்லி கேள்வி கேட்கிறார். பால் உடம்புக்கு நல்லது தனமா என்று சொல்ல, என் பையனுக்கு என்ன நல்லது கெட்டதுன்னு எனக்கு தெரியும் இந்த பாலை எடுத்துக்கிட்டு போய் சிங்க்ல ஊத்து என்று சொல்லுகிறார்.

நந்தினி நம்ம இவ்வளவு தூரம் பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போயிடுச்சு அய்யா என்று பதறிக் கொண்டு வந்து சொல்ல மறுபக்கம் சூர்யா கீழே விழுந்து கிடக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் பதறிப் போய் ஓடி வந்து எழுப்புகின்றன. என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Moondru Mudichu Serial Today Promo Update 14-02-25
Moondru Mudichu Serial Today Promo Update 14-02-25