பரசுவிற்கு உதவும் முத்து, மீனா.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
பரசுவிற்கு உதவ முத்துவும் மீனாவும் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஸ்ருதியிடம் நீங்க கார் ஓட்ட கத்துக்கலையா என்று கேட்க அதெல்லாம் ரொம்ப கவனிக்கணும் அதனால எனக்கு செட் ஆகாது என்று சொல்லுகிறார் ஒருவேளை கார் வாங்கிட்டீங்களா என்ன பண்ணுவீங்க என்று கேட்க ரவி ஓட்டுவ அப்படி இல்லன்னா ஆள் வச்சுபோம் என்று சொல்லுகிறார் சுருதி உடனே விஜயா அதுக்கு எதுக்கு ஆளு அதான் மீனா கத்துக்குறாளே அவளையா வச்சுக்கோ என்று சொல்ல உடனே சுருதி அவங்களும் ஒன் ஆப் த ஓனர் தான் கற்றுக்கொண்டார்கள் என்றால் அவ்வளவு நாலு பேருக்கு சொல்லி கொடுப்பாங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
பிறகு அனைவரும் கிளம்ப ரூமுக்குள் சென்ற மனோஜ் ரோகினி மனோஜை பார்த்து எவ்வளவு உஷாரா எல்லாத்தையும் செக் பண்றாங்க பாரு நீ அப்படி இல்லை என்று சொல்ல அவங்க கூட என்ன கம்பேர் பண்ணாத நான் எவ்வளவு படிச்சிருக்கேன் தெரியுமா என்று கேட்க படிச்சா மட்டும் போதாது அது எப்படி பயன்படுத்தணும் தெரியணும் ஒரு ஜிஎஸ்டி கூட கட்டாம இவ்ளோ நாள் விட்டு வச்சிருக்க என்று மனோஜை திட்டி விடுகிறார். மறுபக்கம் சீதா ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்க டிராபிக் கான்ஸ்டபிள் அவரை நிற்க வைத்து ஹெல்மெட் போடாததால் பைன் கட்ட சொல்லுகிறார் சீதா எப்படி இருக்கீங்க அம்மா நல்லா இருக்காங்களா என்றெல்லாம் கேட்க அவர் அதைப் பற்றி எதுவும் பதில் சொல்லாமல் ஹெல்மெட் போடாமல் ஒட்டிட்டு வந்தார் உங்களுக்கு தான் ஆபத்து என்று சொல்லி பில் போட சொல்லுகிறாகேட்க தெரியலையா என்று கேட்க, எனக்கு இப்ப டியூட்டில இருக்கும்போது நாங்க எல்லாம் பார்க்க மாட்டேன் என்று சொல்லி அவர் கையில் இருக்கும் ஆயிரம் ரூபாயை கொடுக்கப் போக உடனே சீதா எனக்காக யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என சொல்லி அவரே பைன் கட்டி விட்டு சென்று விடுகிறார்.
அண்ணாமலை வெளியில் கிளம்பி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அவரது நண்பரான பரசு வர அவரை வரவைத்து நலம் விசாரிக்க கண் கலங்கி அழுகிறார். என்னாச்சு பரசு என்ன விஷயம் என்று கேட்க, என் பொண்ணு பவானி இப்படி பண்ணுவானு நான் நினைக்கல என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து ஒரு லெட்டரை எடுத்து இதை எழுதி வைத்துவிட்டு ஓடி போயிட்டா என்று சொல்லுகிறார் உடனே முத்து அந்த லெட்டர் படிக்க அதில் நீங்க இவ்வளவு நாளா நீங்க நல்லா பாத்துக்கிட்டிங்க ஆனா இனிமே வாழ்க்கை நான் இவர் கூட தான் வாழ போகிறேன். ஒரு நாள் என்னை ஏத்துப்பீங்க என்று நம்புகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களது மகள் ஓடி விட்டதாக சொல்ல பரசு கண் கலங்கி அழுகிறார். அவளுக்கு இப்பதான் ஒரு வரன் பார்த்தேன் நல்ல பையனா தான் பார்த்தேன் என்று அழ வரன் பார்க்கும் விஷயத்தை பவானி கிட்ட சொன்னீங்களா என்று கேட்க இல்லப்பா என்று சொல்லுகிறார் இந்த காலத்தில் இருக்கிற பொண்ணுங்க கிட்ட நீங்க அதைக் கேட்டு இருக்கணும் அவங்களே கூட நல்ல வாழ்க்கையை சூஸ் பண்ணலாம் இல்ல என்று சொல்ல அண்ணாமலையும் அதுவும் கரெக்டு தான் பா என்று சொல்லுகிறார். உடனே விஜயா இப்ப சொல்லி எல்லாம் பிரயோஜனம் முதல்ல போய் தேடி கூட்டிட்டு வாங்க அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்ல அண்ணாமலை அதுவும் கரெக்ட் தான் முதல்ல போய் உன் பொண்ண தேடி கூட்டிட்டு வா என்று சொல்ல நான் எங்க போய் தேடுறது என்று அழுகிறார். உடனே முத்துவும் மீனாவும் பவானி வேலை செஞ்ச இடத்தில் விசாரிக்க செல்கின்றனர். அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் முத்து விசாரிக்க முதலில் அந்த பெண் எதுவும் சொல்லாததால் அவரை வெளியே போக சொல்லிவிட்டு மீனா அவர் யார் தெரியுமா சிஐடி ஆபிஸர் மப்டில வந்திருக்காரு நீ மட்டும் உண்மைய சொல்ல கேஸ் ஜெயில் அலய வேண்டியது இருக்கும் என்று மிரட்டி கொஞ்ச நேரத்துல வெளியே வரவேண்டும் வந்து எல்லா விஷயத்தையும் சொல்லணும் என சொல்லிவிட்டு மிரட்டி விட்டு செல்கிறார்.
மறுபக்கம் பவானியில் காதலன் வீட்டில் கறிக்கடைக்காரர் மணி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் அவர் பவானி காதலனின் அம்மாவுடைய அண்ணன் என தெரிய வருகிறது. அவர் அவர்களிடம் காதலிக்கிறதா அவன் முன்னாடியே உங்ககிட்ட சொல்லிருக்கான் நீங்க எதுக்கு அத பத்தி பேசாம இருந்திருக்கீங்க என்று சொல்ல அதற்கு அவர் அப்பா இவ்வளவு நாள் வளர்த்த நம்மளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா என்று கேட்க அப்படி கல்யாணம் பண்ணி வச்சா மட்டும் அவங்க சந்தோஷமா வாழ்ந்துருவாங்களான்னு தெரியுமா நல்ல குடும்பமா இருந்தா அவங்களுக்கு பேசி முடிச்சிடலாம் நான் போய் விசாரிச்சிட்டு வரேன் என்று கிளம்புகிறார்.
பிறகு அந்தப் பெண்ணிடம் பவானியில் காதலர் குறித்து விசாரிக்க அவர் என்ன சொல்லுகிறார் ?முத்துவும் மீனாவும் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
