மே.30-ந்தேதி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி..

Web Ads

மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம் தந்த கொடை ‘இசைச் சித்தர்’ இளையராஜா.

இசை சாம்ராஜ்யம் இளை​ய​ராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்​பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி​யின் நேரடி நிகழ்ச்​சியை லண்​டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்​தி​னார். ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் நடத்​திய இந்த சிம்​பொனி இசை நிகழ்ச்சிக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்​தது.

இதன் மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனி எழுதி அதை அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை, இளை​ய​ராஜா படைத்தார். இந்​நிலையில், சென்னையில் மே 30-ந்தேதி ‘வேலியன்ட்​’ சிம்பொனி இசை நிகழ்ச்​சி நடத்த உள்ளதாக இளையராஜா அறிவித்துள்​ளார்.

‘ஃபிரம் ராஜா வித் லவ்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்​சி​யில், சர்​வ​தேச மற்​றும் உள்​நாட்டு இசைக்​கலைஞர்​கள் பங்​கேற்று நேரலையாக இசைக்க உள்​ளனர். இந்​நிகழ்ச்சி நடை​பெறும் இடம் உள்ளிட்ட விவரங்​கள் விரை​வில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனை எதிர்பார்த்து இசை ஆர்வலர்கள் ஆவலாய் உள்ளனர். ஆம், இசையால் வசமாகா இதயமெது.!

may 30 from raja with love symphony event says ilaiyaraaja
may 30 from raja with love symphony event says ilaiyaraaja