Master Interval Secret Details
Master Interval Secret Details

இடைவேளைக்குப் பிறகு மாஸ்டர் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து முக்கிய பிரபலம் ஒருவர் பேசியுள்ளார்.

Master Interval Secret Details : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் கையில் மாநகரம் என்ற இரண்டு மாபெரும் வெற்றி படங்களை இயக்கி இருந்தவர்.

ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகும் மாஸ்டர் வெளியான அதிரடி அறிவிப்பு.!

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் உடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார் ரத்னகுமார்.

ரத்னகுமாரும் மேயாத மான், ஆடை என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜயுடன் விஜய்சேதுபதி அர்ஜுன் தாஸ் மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா சாந்தனு ஸ்ரீமன் மகேந்திரன் சஞ்சீவ் என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். விஜயன் உறவினர் பிரிட்டோ என்பவரும் மற்றொரு பிரபல தயாரிப்பாளரான லலித் குமாரும் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீசாகாமல் தள்ளிப்போனது.

மேலும் மாஸ்டர் திரைப்படம் எப்படியும் பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் பிறந்த நாளன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மாஸ்டர் படத்தின் இன்டர்வல் காட்சி குறித்து பேசியுள்ளார் ரத்னகுமார்.

இடைவேளைக்கு பிறகு மாஸ்டர் திரைப்படம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் இன்டர்வெல் காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக தியேட்டரே அதிரும் அளவில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

53 வயதிலும் அழகில் அடித்துக் கொள்ள முடியாத நதியாவிற்கு இவ்வளவு பேரழகான மகள்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த உற்சாகம் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் இப்படியே படத்தில் அப்டேட்களை கொடுத்துக் கொடுத்தே படத்தின் கதையை ரிலீசுக்கு முன்பே சொல்லி விடுவார்களே எனப் புலம்பி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக நடிகை ஆண்ட்ரியா மாஸ்டர் படத்தில் விஜய்க்கு கார் சேசிங் சீன் ஒன்று உள்ளது அது மிகவும் பிரமாண்டமாக இருக்கும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.