Massive Plan in Master Release
Massive Plan in Master Release

மாஸ்டர் திரைப்படம் மற்றும் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Massive Plan in Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளனர். சாந்தனு, சஞ்சீவ் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்க மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடக்கும் புதிய புரட்சி – இனி இப்படி தான்.!

ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவால் தள்ளி போய் உள்ளது. இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பிறகு படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் இப்படத்தின் வசூல் எக்கச்சக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.