மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் நிறைவேறாமல் போன கடைசி ஆசை இது தானா? முழு விவரம் இதோ.!!

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் நிறைவேறாமல் போன ஆசை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Manoj Bharathiraja's last unfulfilled wish
Manoj Bharathiraja’s last unfulfilled wish

தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பலர் வீடியோ மூலம் மற்றும் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்து வந்தாலும் அரசியல் பிரபலம் சீமான், சூர்யா, கார்த்தி, ராதிகா, சரத்குமார், வைரமுத்து, கார்த்திக் சுப்புராஜ் போன்ற பல பிரபலங்கள் கண்ணீர் மல்க நேரில் வந்த அஞ்சலை செலுத்தியுள்ளனர்.

TVK தலைவர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிலையில் இவரின் நிறைவேறாத ஆசை குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அடுத்த பாகத்தை சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வந்துள்ளார். கடைசி வரை அவருடைய ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.

ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Manoj Bharathiraja's last unfulfilled wish
Manoj Bharathiraja’s last unfulfilled wish