விஜய் ஆண்டனி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!

விஜய் ஆண்டனி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

actor vijay antony new movie update
actor vijay antony new movie update

தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் நினைத்தாலே இனிக்கும், சலீம், நான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான ஜென்டில்வுமன் படத்தின் இயக்குனர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vijay antony new movie update
actor vijay antony new movie update