சீரியலில் ஹீரோவாகும் பாடலாசிரியர் சினேகன், ஹீரோயின் யார்? எந்த சேனல் தெரியுமா?
பாடலாசிரியர் சினேகன் சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
பாடலாசிரியர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு நீண்ட வருடங்களாக காதலித்த கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்டு கிராமத்தில் இயற்கையான சூழலில் மனைவியுடன் ரீலீஸ் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அப்பா அம்மா ஆகப் போகிறோம் என்று தகவலை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக விஜய் டிவி பிரபலம் அனிதா சம்பத் நடிக்க உள்ளார். பவித்ரா என்ற பெயரில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக போகும் இந்த சீரியலில் பணக்கார பெண்ணாக அனிதா சம்பத்தும் அந்த வீட்டில் வேலை செய்பவராக சினேகனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.