ஹிட் கொடுத்த லப்பர் பந்து, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு அடித்த ஜாக்பாட்..!
லப்பர் பந்து படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் லப்பர் பந்து. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இது மட்டும் இல்லாமல் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிய இந்த படம் வசூலிலும் தூள் கிளப்பியது என்றே சொல்லலாம். இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர் இயக்கப் போகும் புதிய படத்திற்கு ரூபாய் மூன்று கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் படத்தின் வெற்றியால் கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தியுள்ளார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
