திருமணத்திற்கு பிறகும், கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிப்பாரா?
தனது காதலரை மணந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா என்பது குறித்து காண்போம்..
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். ஆண்டனி கிறிஸ்தவர் என்பதால், கோவாவில் உள்ள பிரபலமான சர்ச்சில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், கிறிஸ்துவ மதத்தில் திருமணம் நடைபெற்றது போன்ற, எந்த ஒரு புகைப்படமும் இணையத்தில் வெளியாகவில்லை. கிறிஸ்தவரான ஆண்டனி, நெற்றியிலே நாமம் போட்டுக் கொண்டு ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர் போல இருந்தார்.
கீர்த்தி சுரேஷின் அப்பா ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தனது மருமகனான ஆண்டனிக்கும் நாமத்தை போட்டுள்ளார். அந்த அடிப்படையிலேயே, கிறிஸ்தவராக இருந்த ஆண்டனி தற்போது இந்துவாக மதம் மாறி, அப்பாவின் மடியில் அமர்ந்து இருந்த கீர்த்தி சுரேஷூக்கு எழுந்து நின்று தாலிகட்டி உள்ளார்.
இச்சூழலில், கீர்த்தி சுரேஷ் தனது படங்களில் நடித்திருப்பதால், நட்பின் அடையாளமாக நேரடியாக கோவாவிற்கே சென்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார் விஜய். இந்த திருமணத்தில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்தது போன்ற வீடியோக்களும் வெளியானது. அது சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி நடிப்பாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது கீர்த்தி சுரேஷ், ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல், இன்னும் 2 படங்கள் கைவசம் உள்ளன.
இதனால், கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பார். இதற்கு எந்த விதமான தடையையும் ஆண்டனி தட்டில் போட மாட்டார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.