Pushpa 2

சீக்கிரம் வாங்க சார்: கமல்ஹாசனுக்கு, ரசிகர்கள் கோரிக்கை..

‘விண்வெளி நாயகன்’ கமல்ஹாசனுக்கு, ரசிகர்கள் விடுத்துள்ள கோரி்க்கை பற்றி பார்ப்போம்..

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல். கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்துள்ளார்.

‘நாயகன்’ படத்திற்கு பிறகு, 38 வருடங்கள் கழித்து மீண்டும் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து, அமெரிக்கா சென்ற கமல், அங்கு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பற்றிப் படிப்பதாக தகவல்கள் வருகின்றன. அதனால், பிக் பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என தெரிகின்றது.

இந்நிலையில், தனது வலைத்தள பக்கத்தில் கமல்ஹாசன், சிகாகோவில் உலா வரும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.வழக்கம்போல, செம ஸ்டைலாக கிளாஸாக கமல்ஹாசன் அந்த புகைப்படத்தில் காணப்படுகின்றார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், விண்வெளி நாயகா? எப்போ சார் இந்தியா வருவீங்க? சீக்கிரம் வாங்க சார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள ரொம்ப மிஸ் பண்றோம் போன்ற கமெண்ட்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் இந்தியா வந்தவுடன், தக் லைஃப் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளை மேற்கொள்வார் என தெரிகின்றது.

அதன் பிறகு, அன்பறிவு இயக்கத்தில் உருவாகும் KH237 பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

fans reactions for kamalhaasan recent pictures
fans reactions for kamalhaasan recent pictures