Pushpa 2

நடிகர் சூரி இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்: படத்தின் ‘கதை’ பற்றிய விவரம்..

இயக்குனராக களம் காண இருக்கிறார் சூரி. அவர் இயக்கவிருக்கும் படத்தின் கதை குறித்த விவரம் காண்போம்..

திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானார் சூரி. இதனைத் தொடர்ந்து, கொட்டுக்காலி, கருடன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின.

இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து முடித்துள்ள விடுதலை-2 படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரி நடிக்க, விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கேரக்டரில் வருவதாக கூறப்பட்டுள்ளது.

இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் புரொமோஷன்களுக்காக விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூரி தன்னுடைய அப்பா மற்றும் அம்மா ஆகியோரின் புகைப்படங்களை காட்டி, அவர்களின் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அப்பா முத்துச்சாமி மற்றும் அம்மா செங்கை அரசி குறித்த மகிழ்ச்சியான நினைவுகளை சூரி பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்களின் வாழ்க்கையை கண்டிப்பாக படமாக இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.

கூறும்போது சாதாரணமாக தெரியும். ஆனால், அதிகமான விஷயங்கள் ஷேர் செய்வதற்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்பா தற்போது தவறி விட்டதாகவும் ஆனால், வாழ்க்கையில் பொறுமையாக இருந்து சினிமாவில் முன்னுக்கு வந்ததற்கு அவர்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். அவர் அடிக்கடி தன்னை சிங்கக்குட்டி என்று கூறுவார் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அப்ப, சூரி படத்தோட டைட்டில் ‘முத்து பெத்த சிங்கம்’ என்கிற ரேஞ்சுல இருந்தாலும் இருக்கலாம்..!

actor soori open up about his direction
actor soori open up about his direction