கடைசி நாள் ஷூட்டிங்கில், செம ஸ்டைலிஷ் லுக்கில் ‘தல அஜித்: ரசிகர்கள் உற்சாகம்..
‘தல’ அஜித் குறித்த மாஸ் அப்டேட் பார்ப்போம்..
‘தல’ அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லீ’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வந்த அஜித், ஏற்கனவே ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை முடித்து டப்பிங் பணியையும் நிறைவு செய்த நிலையில், தற்போது ‘குட் பேட் அக்லீ’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
‘குட் பேட் அக்லீ’ படத்திற்காக அஜித், தன் உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். மேலும், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கும்போது அஜித் அப்படியே ‘அமர்க்களம்’ படத்தில் இருந்ததை போல் இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர், அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜுன் தாஸ், சுனில், நட்டி நடராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அசத்தலான கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம், இந்த படத்தில் அஜித்தின் காமெடியும் களை கட்டும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள். உடல் முழுவதும் டேட்டோ, நகை என சும்மா மாஸ் கெட்டப்புக்கு மாறி அஜித் இப்படத்தில் மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கலை குறி வைத்துள்ளதால், ‘குட் பேட் அக்லீ’ படத்தின் ரிலீஸ் தேதி மே மாதம் எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் அஜித், பிரபல தெலுங்கு நடிகர் சுனிலுடன் ஷூட்டிங் கடைசி நாளில் பேசிக்கொண்டிருக்கும் போது, அஜித் மிகவும் ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆதிக் வெளியிட்டுள்ளார்.
அசத்தலாய் தெறிக்கும் இப்புகைப்படத்திற்கு, ‘ஆயிரம் அமர்க்களம்’ என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.