ஜெயம் ரவியை நெகிழச் செய்த சிவகார்த்திகேயன்: எப்படி தெரியுமா?
‘நிலை உயரும்போது, பணிவு வந்தால் உலகம் உன்னை வணங்கும்’ என்ற கண்ணதாசன் பாட்டு வரிபோல, SK25 பட பூஜையில் நிகழ்ந்ததை காண்போம்..
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. சூர்யா நடிப்பதாக இருந்த இப்படத்தில் சிவகார்த்தி நடிக்கிறார்.
மேலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது, ரசிகர்களை எதிர்ப்பார்க்க வைத்துள்ளது.
ஹீரோவாக நடித்து வரும் ஜெயம் ரவி மற்றொரு ஹீரோவின் படத்தில் நடிக்கின்றார் என்றால், கண்டிப்பாக அவருக்கு சிறப்பான ஒரு ரோல் கொடுக்கப்பட்டிருக்கும் என்றே தெரிகின்றது.
இந்நிலையில், SK25 படத்தின் பூஜையின்போது நடந்த ஒரு நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கின்றது. SK25 படத்தின் பூஜையின் போது வைக்கப்பட்ட பேனரில், ஜெயம் ரவியின் பெயர் முதலில் இருந்தது. அதன் பிறகு தான் சிவகார்த்திகேயனின் பெயரும், அதர்வாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
தன்னை விட ஜெயம் ரவி சீனியர் நடிகர் என்பதால், அவரின் பெயரை படத்தின் பேனரில் முதலில் இடம்பெற செய்திருக்கின்றார் சிவகார்த்திகேயன். இவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் SK25 திரைப்படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக ஜொலிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற ‘கிஸ்ஸிக்’ பாட்டு போல, இந்த படத்தில் லீலாவுக்கு வேற லெவலில் இருக்குமோ.!
![sivakarthikeyan nice gesture tojayam ravi in sk25 movie](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/sk25.avif)