விஜய்யின் தவெக கட்சி குறித்து, கமல்ஹாசன் பேச்சு..
விஜய்யின் தவெக கட்சி பற்றி கமல் தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துக் காண்போம்..
மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ பட புரமோஷனுக்காக துபாய் செல்லும் கமல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானது பற்றித் தெரிவிக்கையில், ‘அங்கே நமது மையத்தின் குரல் ஒலிக்க வேண்டும். பாரபட்சம் இல்லாத தமிழ்நாட்டு மக்களுக்கான குரலாக அது இருக்கும்’ என்றார்.
விஜய்யின் தவெக கட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நானும் புதிய கட்சிதான். அதனால், புதிய கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது’ என்றார். கமல் தெரிவித்துள்ள இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக ‘தக் லைஃப்’ படம் பற்றித் தெரிவிக்கையில், ‘நன்றாக வந்துள்ளது என்ற நம்பிக்கையில் தான் உங்கள் முன்பாக எடுத்து வந்திருக்கோம். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது ‘தக் லைஃப்’ படம் மக்களுக்கு பிடிக்கும் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.
படத்தின் புரமோஷனுக்காக மலேசியா சென்று, அங்கிருந்து துபாய் போகிறோம். அங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. படம் ரிலீசாகும்போது சென்னை வந்து விடுவேன்’ எனவும் கூறினார்.
நீண்ட இடைவேளைக்கு கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார் சிம்பு. மேலும் திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம், வரும் ஜுன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
