‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் டெடிகேஷன்: சின்னி ஜெயந்த் பாராட்டு..
தனுஷ் நடித்த ‘தொடரி’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் சின்னி ஜெயந்த். இதனைத் தொடர்ந்து, தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக்லைஃப்’ படத்திலும் சின்னி ஜெயந்த் நடித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சின்னி ஜெயந்த், படத்தில் சிம்புவின் நடிப்பை பாராட்டியிருக்கிறார். ‘சிம்புவை நாம் முன்பு எப்படி அழைப்போம். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று தானே அழைப்போம். அவர் இப்பவும் லிட்டில் சூப்பர் ஸ்டார் தான்.
தக் லைஃப் படத்தில் அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. கண்டிப்பாக ரிலீசுக்கு பிறகு, சிம்புவின் நடிப்பு பேசப்படும் விஷயமாக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு சிம்பு வந்துவிடுவார். பாகிஸ்தான் பார்டரில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கே முதல் ஷாட் நடக்கும். ரூமில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்ல மூன்று மணி நேரம் ஆகும்.
இருந்தும் ஷூட்டிங் டைமிங் முன்பே சிம்பு ஸ்பாட்டில் இருப்பார். முதல் ஆளாக சிம்பு தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார். அப்படி ஒரு டெடிகேஷனை நான் சிம்புவிடம் பார்த்தேன். என்றார்.
சிம்பு பற்றி வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் இருந்து வந்தன. ஆனால், தற்போது சிம்புவை பற்றி வெளியாகும் தகவல்கள் பாஸிட்டிவாகவே இருக்கின்றன. இது அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு காதல் கதையொன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
