‘சச்சின்’ – ‘வாடிவாசல்’ ஷூட்டிங் வொர்க் குறித்து, கலைப்புலி எஸ்.தாணு அப்டேட்
தளபதி விஜய் நடித்த ‘சச்சின்’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படங்கள் குறித்து, வெளியான புதிய தகவல் பார்ப்போம்..
திறன்மிகு இயக்குனரான வெற்றிமாறன் ‘விடுதலை-2’ படம் திரையங்குகளில் ரிலீஸான நிலையில், விரைவில் ஓடிடி.யில் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, ‘வாடிவாசல்’ படப்பணிகளில் சூர்யா இணைகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இச்சூழலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கலெக்ஷன் அள்ளிய நிலையில், வரும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போவதாக கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.
‘இளைஞர்களை மிகவும் கவர்ந்த ‘சச்சின்’ திரைப்படம் ரீ ரிலீஸில் நிச்சயம் இன்னும் பெரிய அளவில் ஈர்க்கும்’ என்கிறார்.
சச்சின் படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் தான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் அவரது கால்ஷீட் கிடைக்காத நிலையில், விஜய் அந்த படத்தில் கமிட்டாகி நடித்து, படத்தை வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றுவிட்டார்’ என கலைப்புலி எஸ்.தாணு பெருமிதமாய் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படம், தமிழர்களின் கலாச்சாரத்தையும் வீரத்தையும் அழுத்தமாக உரைக்கும். அதே நேரத்தில் உணர்வுபூர்வமாகவும் அனைவரும் விரும்பும் வரலாற்றுப் படைப்பாக நிச்சயம் இருக்கும்’ எனவும் “வி.கிரியேஷன்ஸ்” தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உறுதிபட குறிப்பிட்டுள்ளார்.
ஆம், கொம்பு வெச்ச சிங்கத்தை யாவரும் கொண்டாடுவோம், குதூகலிப்போம். வெயிட்டிங்.!