செம வைரலாய் ‘விடாமுயற்சி’ படப் பாடல்: ரசிகர்கள் கொண்டாட்டம்
‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு தற்போது, வரும் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனுடன் ‘விடாமுயற்சி’ டீசரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி எங்கும் ஹிட்டடித்து வருகின்றது.
‘சவ்தீக’ என்ற செம துள்ளலான அந்த பாடலை ஆண்டனிதாசன் பாட, அனிருத் இசைமைத்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால், இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் செம கிளாஸாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் ‘சவ்தீக’ பாடல் செம மாஸான ஒரு பாடலாக வெளியானது பலருக்கும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக இருந்தது. அதிலும் குறிப்பாக அஜித்தின் நடனம் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. கோட் சூட் போட்டுக்கொண்டு அஜித், திரிஷாவுடன் ஆடும் நடனம் வைரலாகி வருகின்றது.
கணவன் மனைவியை பற்றி வெளியான இப்பாடல் யூடியூபில் பல பெரிய அளவில் தெறித்திருக்கிறது. இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் செம வைபான பாடலாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இயக்குனர் மகிழ் திருமேனியையும் நடன இயக்குனர் கல்யாணையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.