Kaappaan Teaser
Kaappaan Teaser

Kaappaan Teaser : கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

சூர்யா படத்துக்கு இப்படியொரு தலைப்பா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த டீசரில் ஒரு வசனம் வரும். ”போராடுவது தப்பென்றால் போராடும் நிலைக்கு கொண்டு வந்ததும் தப்புதானே” எனும் அந்த வசனம் தற்போது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

மேலும் இது ரஜினிக்கு எதிரான வசனம் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர். தூத்துக்குடி போராட்டத்தின் போது பேசிய ரஜினி, எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் நாடே சுடுகாடாக மாறிவிடும் என்றார்.

அதைத்தான் இப்படத்தில் சூர்யா கிண்டல் செய்திருப்பதாக நெட்டிசன்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here