Soorarai Pottru
 Soorarai Pottru

 Soorarai Pottru : சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூர்யா 38.

இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

தமிழ் புத்தாண்டில் சூர்யா 38 கொண்டாட்டம் – ட்விஸ்ட்டுடன் ட்வீட் போட்ட கே. வி ஆனந்த்.!

அண்மையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். சூரரைப் போற்று என்பதுதான் இப்படத்தின் தலைப்பு.

 Soorarai Pottru

பொதுவாக முன்னணி ஹீரோக்களின் டைட்டில் மாஸாக தான் இருக்கும். ஆனால் இப்படத்தின் டைட்டில் வித்தியாசமாக இருப்பது சிலரை அதிருத்யில் ஆழ்த்தியுள்ளது. எனினும் ஒரு தர்ப்பினர் இதை வரவேற்று வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற போஸ்டர் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும் ஜி.வி.பிரகாஷ்  இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here