பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.. குஷ்பூ மகள் அவந்திகா பேச்சு..!
பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக குஷ்பூ மகள் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ்களில் ஹீரோயினாக கலக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் குஷ்பூ. தற்போது தயாரிப்பாளராகவும் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது கணவர் சுந்தர் சி இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜைக்கு மகள்களுடன் பங்கேற்று இருந்தார். மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஹீரோயின் மாற்றப் போவதாக சர்ச்சையும் வெளியானது ஆனால் குஷ்பூ அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் குஷ்புவின் மூத்த மகளான அவந்திக்காவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதாக சொல்லி இருக்கிறார். சமீபத்தில் இது குறித்து பேசிய அவந்திகா நான் எந்த ஒரு மொழி படத்திலும் நடிப்பதற்கு தயாராக தான் இருக்கிறேன் நல்ல கதையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் நடிகைகள் என்றால் இந்த நிறத்தில் தான் இருக்க வேண்டும் இந்த உயரத்தில் தான் இருக்க வேண்டும் என்ற வரையறை இருக்கிறது. நான் உயரமாக இருப்பதால் எனக்கு பட வாய்ப்பு வரவில்லை. ஆனாலும் பட வாய்ப்புக்காக நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
