சேயோன் திரைப்படத்தில் இணைந்தார் சீமான்!

இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட செந்தமிழன் சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது மதுரையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சீமான், தனது காட்சிகளில் நடித்து வருகிறார். அவரது வருகையால் ‘சேயோன்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அன்பறிவ் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
தொடர்ந்து வெளியாகி வரும் புதிய அறிவிப்புகளால் ‘சேயோன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் கவனம் பெற்றுத் தந்துள்ளது.
சேயோனில் இணைகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள்@Seeman4TN#சேயோன் #Seyon #VetrivelVeeravel #Varendi#KamalHaasan #Sivakarthikeyan@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Dir_SivakumarM @Music_Santhosh @anbariv #BhagyashriBorse @RajbShettyOMK @RKFI @turmericmediaTM… pic.twitter.com/LPb7BVQR2y
— Raaj Kamal Films International (@RKFI) September 8, 2026