செப்டம்பர் 18ல் வெளியாகும் ‘பாரிஸ் கஃபே’ – காதல், உறவுகள் சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை!

குரு சோமசுந்தரம், அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம், வரும் செப்டம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் சராஜ் சீலன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
காதல், குடும்ப உறவுகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக, ஜூன் 5ஆம் தேதி இயக்குநர் சசிகுமார் வெளியிட்ட டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
‘பாரிஸ் கஃபே’ படத்தில் குரு சோமசுந்தரமும் அனுமோலும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழும் தம்பதியாக நடித்துள்ளனர். இவர்களின் குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட, அதன் பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் உணர்வுப் போராட்டங்களே கதையின் மையமாக அமைந்துள்ளன.
சூழ்நிலைகளால் சோதிக்கப்படும் உறவுகள், கடினமான முடிவுகளால் சவாலுக்குள்ளாகும் காதல் மற்றும் மீண்டும் ஒன்றிணைவதற்காக போராடும் குடும்பத்தின் பயணத்தை டிரெய்லர் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது.
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு, பிரான்ஸின் பாரிஸ் நகரமும் கதையின் முக்கியப் பகுதியாக இடம்பெற்றுள்ளது. பாரிஸின் அழகிய பின்னணியையும் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலையும் இணைத்து இப்படம் உருவாகியுள்ளது. காதல், குடும்ப உறவுகள் மற்றும் பாரிஸின் அழகு என மாறுபட்ட அம்சங்களின் கலவையாக ‘பாரிஸ் கஃபே’ உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஜய் விஸ்வா, அர்ச்சனா குமார், சாய் விக்கி, நயனா சாய் மற்றும் பிபின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
LV Entertainment சார்பில் கண்மணி ரங்கநாதன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். கே இசையமைக்க, சதேஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பையும், தாமு MFA கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். வி. தன்ராஜ் ஆடை வடிவமைப்பையும், பிரசாந்த் நடனத்தையும் அமைத்துள்ளனர்.
டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், காதல், உறவுகள் மற்றும் குடும்ப பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையுடன் பார்வையாளர்களை சந்திக்க தயாராகி வருகிறது ‘பாரிஸ் கஃபே’.
‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் செப்டம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
