கிண்டல் அடித்த ரசிகர், திரிஷா கொடுத்த பதிலடி..!
கிண்டல் அடித்த பேசிய ரசிகருக்கு திரிஷா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இந்த படத்தில் திரிஷாவிற்கு கதாபாத்திரம் சரியாக கொடுக்கவில்லை என்றும் டம்மியாக வந்து சென்று இருப்பதாகவும் கிண்டல் அடித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த திரிஷா சமூக வலைதளங்களில் உட்கார்ந்து மற்றவர்களை பற்றிய முட்டாள்தனமான விஷயங்களை பதிவிடும் டாக்ஸிக் மக்களே நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்? நன்றாக தூங்குகிறீர்கள்? பெயர் தெரியாத கோழைகளே காட் பிளஸ் யூ என கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
