ENPT Movie Review
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் மற்றும் பலர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா.

நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

திரைப்பட நடிகை மேகா ஆகாஷ் விருப்பமில்லாமல் ஒரு படத்தில் நடிக்கிறார்.இவரை இயக்குனரும் தயாரிப்பாளரும் சேர்ந்து வற்புறுத்தி நடிக்க வைக்கின்றனர்.

இந்நிலையில் தான் மெகா ஆக்ஷிற்கும் தனுஷுக்கும் இடையே காதல் உருவாக இதனையறிந்த இயக்குனர் இவர்களை மிரட்டி மேகா ஆகாஷை அழைத்து சென்று விடுகிறார்.

நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மேகா ஆகாஷிடம் இருந்து தனுஷிற்கு போன் வருகிறது, மேலும் என்னை உன்னுடைய அண்ணன் தான் காப்பாறியதாகவும் அவரை இப்போது நீ காப்பாற்ற வேண்டும் எனவும் கூறுகிறார்.

அதன் பின்னர் தனுஷ் என்ன செய்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

.தனுஷ் இப்படத்திலும் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களை ஈர்த்துள்ளார். மேகா ஆகாஷ் அழகு தேவதையாக தனுஷுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார். இவர்களின் கெமிஸ்ட்ரி சூப்பர்.

தொழில்நுட்பம் :

இசை :

தர்புகா சிவாவின் இசை படத்திற்கு பலம், பாடல்கள் ஒவ்வொன்றும் தரம். மறுவார்த்தை பேசாதே பாடலுக்கு எல்லாம் தியேட்டரே ஆட்டம் போடுகிறது.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

இரண்டுமே சிறப்பாக அமைந்துள்ளது.

இயக்கம் :

கெளதம் மேனன் இந்த படத்தை எமோஷனல் கலந்த காதல் படமாக கொடுத்துள்ளார். காதல் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இருந்தாலும் சில காட்சிகள் உச்சு கொட்டவும் வைக்கிறது.

கிளைமேக்ஸ் காட்சிகள் சிலருக்கு தெளிவாக புரியாமல் போகவும் வாய்ப்புள்ளது. அதை மட்டும் இன்னும் தெளிவாக கொடுத்திருக்கலாம்.

தம்ப்ஸ் அப் :

1. தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பு
2. காதல் காட்சிகள்
3. பாடல்கள்

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்
2. சலிப்பை ஏற்படுத்தும் சில காட்சிகள்
3. இரண்டாம் பாதியின் வேகத்தை கூட்டி இருக்கலாம்.

YouTube video

YouTube video

REVIEW OVERVIEW
ENPT Movie Review
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
enpt-movie-reviewமொத்தத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா லேட்டா பாய்ந்தாலும் சரியாக தான் பாய்ந்துள்ளது.