சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்ததாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் சூர்யாவை வைத்து கங்குவா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது ஆனால் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.
இந்த நிலையில் சிறுத்தை சிவா அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுத்தை சிவா விஜய் சேதுபதி இடம் ஒன் லைன் கூறியுள்ளாராம் அதற்கு விஜய் சேதுபதி முழு பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது விரைவில் இவர்களது கூட்டணி உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

