ரஜினியின் ‘கூலி’ பட சிங்கிள் பாடல் வெளியீடு அப்டேட்ஸ்
‘கூலி’ படத்தின் மியூஸிக் அப்டேட் பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் 3 என்ற படத்தில் அறிமுகமாகி, ‘கொலைவெறி’ பாடலின் வாயிலாகவும் பிரபலமானவர் அனிருத்.
அதனைத் தொடர்ந்து, ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானும் தற்காலிகமாக இசைத்துறையில் இருந்து விலகிய நிலையில், அனிருத் காட்டில் அடைமழை. செம பிஸி.!
தற்போது, தொடர்ந்து ரஜினியின் கூலி, விஜய்யின் ஜனநாயகன் என ஓடிக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக வெளியான விஜய் நடித்த ‘கோட்’ படம் தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்குமே அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இசையமைக்கும் பாடல்கள் இளசுகளை ஆட்டம் போட வைக்கின்றன. விமர்சனத்தையும் சந்திக்கின்றன. காலம் கடந்தும் மயிலிறகாய் வருடும் பாடல்கள் அவரால் வார்க்க முடியவில்லையோ எனவும் கேட்கப்படுகிறது.
இந்நிலையில், கடைசியாக அனிருத் இசையமைப்பில் விடாமுயற்சி, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகின். அந்த இரண்டு படங்களின் பின்னணி இசையும், பாடல்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக ரஜினியின் கூலி, விஜய்யின் ஜன நாயகன் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
லோகேஷ் இயக்கிய ‘கூலி’ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேறென்ன, ரஜினி ஸ்டைலில் வழக்கம்போல ஆட்டம் பாட்டம் தான்.!