மொட்டை கடிதாசி இருந்தா தான் பேசுவாங்க என்ற நபர் யார்? வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
மொட்டை கடிதாசி இருந்தா தான் பேசுவாங்க என்று நபர் யார் என்று விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் மொட்டை கடிதாசி டாஸ்கில் உங்களுக்கு வந்த லெட்டர் யார் எழுதியிருப்பார் என்று விஜய் சேதுபதி கேட்டிருந்த நிலையில் மஞ்சரி தீபக் என சொல்லியிருந்தார். பிறகு முத்துக்குமாரிடம் கேட்டபோது எனக்கு வந்த மூன்று லெட்டரும் பெண்கள் அணியில் இருந்து தான் எழுதியிருப்பார்கள் என்று சொல்லியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மொட்டை கடுதாசி இருந்தால் தான் பேசுவாங்க இல்லன்னா அந்த இடத்துல பேச மாட்டாங்க என்று சொல்பவர் யார் என்று விஜய் சேதுபதி கேட்ட அதற்கு சௌந்தர்யா ,பவித்ரா, ஜெஃப்ரியை சொல்லுகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram