மொட்டை கடிதாசி யார் எழுதியிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க.. வெளியான முதல் ப்ரோமோ..!
இன்றைய பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்டு ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மொட்டை கடிதாசி டாஸ்க்கில் உங்களுக்கு வந்த லெட்டர் யார் எழுதியிருப்பார் என்று விஜய் சேதுபதி கேட்கிறார்.
அதற்கு மஞ்சரி தீபக் ப்ரோ எழுதியிருப்பார் என்று தோணுது என்று சொல்லுகிறார். முத்துக்குமரனிடம் கேட்டபோது லேடிஸ் ஏதாவது எழுதி இருக்க அதிக வாய்ப்பு இருக்கு என்று சொல்லுகிறார்.
இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram