நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்., திரையுலகினர் இரங்கல்..!
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் டெல்லி கணேஷ். நாயகன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பிரபலமான இவர் சிந்து பைரவி உள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார்.
81 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் நடிகர்கள் நடிகைகள் என பலரும் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.