Pushpa 2

அஜித்தை பற்றி இயக்குனர் சரண் பேசிய விஷயம் – செம வைரல்

‘தல’ அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண். இவர் தற்போது அஜித்தை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அது குறித்த சுவாரஸ்ய நிகழ்வுகள் பார்ப்போம்..

தற்போது, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படும் நிலையில், குட் பேட் அக்லி ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரிகின்றது.

விரைவில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பற்றி அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் சரண் அஜித்தை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என நான்கு படங்களை இயக்கியுள்ளார் சரண்.

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரணுக்கு, கமல் நடிப்பில் வசூல் ராஜா படத்தை இயக்கும் வந்தது.

இப்படத்தின் வாய்ப்பு வரும்போது, சரண் அஜித்தை வைத்து அட்டகாசம் என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் தான் சரணுக்கு ‘வசூல் ராஜா’ வாய்ப்பு கிடைத்தது.

மேலும், வசூல் ராஜா படத்தை உடனடியாக எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயமும் சரணுக்கு ஏற்பட்டது. இதனால், என்ன செய்வது என தெரியாமல் சரண் அஜித்திடம் இந்த விஷயத்தை கூறியிருக்கின்றார்.

அஜித் மிகவும் சந்தோஷமாக, ‘கமல் சாரோட படம் கிடைக்குறது எல்லாம் மிகப்பெரிய வாய்ப்பு ஜி. முதல்ல போய் கமல் சாரோட படத்தை எடுங்க, நம்ம படத்தை அப்புறம் பார்த்துக்கலாம். அதுக்குள்ள நான் வேறொரு படத்துல நடிச்சிட்டு வரேன்’ என கூறி சரணை அனுப்பி வைத்தாராம்.

இதனை நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார் சரண். மேலும், ‘கமல் மீது அஜித் மிகப்பெரிய மரியாதையும் அன்பும் வைத்துள்ளார் அஜித்’ என தெரிவித்துள்ளார்.

தல போல வருமா..!

director saran vairal speech to ajith respects